செவ்வாய், 5 அக்டோபர், 2010

மெளனத்தை மொழியாக்கித் தா...!

உன்
மெளனத்தை மொழியாக்கித் தா...
ஆயிரம் கவிதைகள் எழுதிடுவேன்..!
பார்வையாலே அபிநயத்தை தா..
எல்லோரா ஓவியமாய் தீட்டிடுவேன்..!
இதழாலே ஒரு முத்தம் தா...

அழகு சிலையாக

உனை நான் வடித்திடுவேன்..!

உன் இதயத்தை எனக்காக தா...

என்னையே உன்னிடத்தில்
தந்திடுவேன்...!


இரங்கற்பா...

புழுதி படாத நிலாவே... நீ
புறப்பட்டு விட்டாய்...
நான் புலம்பித் தவிக்கின்றேன்..!
உனக்கு இரங்கற்பா எழுத
என் விரல்கள் சம்மதிக்கவில்லை...
எனினும் எனது
ஞாபகத் தாஜ்மகாலாக
இக்கவிதாஞ்சலி இருக்கட்டும்...!


விடுகதை

நீ ...
ஒரு சிறுகதைதான் என நினைத்தேன்.ஆனால்
தொடர்கதை ஆனாய்..
உன்னை விடுகதை என நினைத்தேன்...நீயோ
என்னை விடாக்கதை ஆகி விட்டாயே..
!


சனி, 24 ஜூலை, 2010

பெண்மைப் பூக்கள்..!


பிரபஞ்சப் பூந்தோட்டத்தில்
மலர்ந்த பெண்மைப் பூக்கள்..
வர்க்கப் பேதத்தால்
கருகிப் போயின...

குடும்பப் பத்திரிக்கைப் போர்வைப்
போர்த்தி நடுப் பக்கத்தில்
அரை நிர்வாணத்தைஆடையாய் ஆக்கி
வியாபாரம் இங்கு விரசமாய் நடக்குது...!

எழுத்தாளன் படைக்கும் பெண்கள்
கூடஅடிமையாய் இங்கே அவதரிக்கின்றனர்...
ஓவியன் தீட்டும் தூரிகை
கூடகவர்ச்சியை மையமாக்கிக் கருத்தரிக்கின்றனர்...

குட்டக் குட்ட குனிந்து
கொண்டேபெண்கள் கூட்டம் குனிந்தே நடக்குது...
கல்லானாலும் கணவன்
என்றேபெண்மைகள்
இங்கேமெழுகாய் உருகுது...!

வியாழன், 22 ஜூலை, 2010

சொர்க்கத்தின் திறப்பு விழா...!


உன் விழியசைவில்
என் இதயம்தனை
தந்து விட்டேன்...

உன் இதழோரம்
கம்பரசம்
பருகி விட்டேன்...

இனி நாளைய
உதயம்
உனக்காகத்தான்...

சொர்க்கத்தின்
திறப்பு விழா
நமக்காகத்தான்...!


செவ்வாய், 20 ஜூலை, 2010

எங்கே போனாய் ....?

இந்த உலகம் எனக்கு
வெறுமையாய் ஆனபோது
நீ
ஆறுதல் தந்தாய்....
கண்டெடுத்தேன் முத்தை என்று
நான்முகம் மலர்ந்த போது
காணாமல் போய் விட்டாய்....
இந்த உலகம் எனக்கு
மீண்டும் வெறுமையாய்....
எங்கே போனாய்
என் நிலவு பெண்ணே....

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஒரு போராளிக்கு...


தோழா...
தாலாட்டுக் கேட்டது போதும்..
மரணம் நம்மை தாலாட்டும் காலம்
வந்து விட்டது...

தினம் நீ தரிசனத்திற்காக
காத்திருந்தது போதும்...
மரண தரிசனம் காணும் நாள்
நெருங்கி விட்டது...

உன்னை நீ
அலங்காரப் படுத்திக் கொள்ளாதே...
நமக்காக அங்கு
அலங்காரப் பாடைகள்
தயாராகிக் கொண்டிருக்கிறது...

தோழா.. புகைப் பிடிப்பதை நிறுத்து..
நம்மை விரைவில் புகை சூழப் போவது
உனக்குத் தெரியாதா..?
இளைப்பாறாதே...
நீண்ட இளைப்பாறலக்கு
தயார் செய்து கொள்வோம் வா...!

இன்றைய மாலை மரியாதைகளுக்கு
மயங்கி நிற்காதே...
நாளை உன் மரணத்திற்கு வரும்
மாலைக்குத் தான் மரியாதை உண்டு..!

இன்றைய இருள்களின்
குளிர்ந்த இன்பங்களை விட
நாளைய பகல்களின்
வெப்பங்கள் மகத்துவம் மிக்கது..!


செவ்வாய், 29 ஜூன், 2010

என்னை புதை...

மரணத்திற்கு முன்பே
என்னை புதை
உன் இதயத்தில்...

என்னவள்...

ஊரெல்லாம் பூ வாசம்
ஓ....
என்னவள் போகிறாளா...?

மங்கை...

விழி மூடினேன்
கட்டி அனைத்தாள்.
கனவு மங்கை...

நானதான் நீ....

உன்னை ரசிப்பவர்களை
நான் ரசிப்பேன்...
உன்னை நேசிப்பவர்களை
நான் நேசிப்பேன்...
உன்னை பாராடுபவர்களை
நான் பாராட்டுவேன்...
ஏனென்றால் நீதான் நான்...
நான்தான் நீ....

முகம் அழிக்கும்....


சோரம் போன
துப்பாக்கி
வீரம் பேசுகிறது...
அவனின் கண்ணீர்
திராவகமாய் மாறி
நாளை
இராணுவத்தின்
முகம் அழிக்கும்.
(அமெரிக்க இராணுவம் வியட்நாமில்அப்பாவி மக்களை
கொன்று குவித்த போது எடுத்த படங்களில்இதுவும் ஒன்று.- முத்தாரம் புகை பட கவிதை போட்டியில் நான் எழுதி பரிசு பெற்ற கவிதை. 1991 ல்.)

பித்தனாய் நான் ஆனேன்...

கத்தி இன்றி என்னைக் காயப்படுத்தி
ரத்த இழப்பின்றி - என்
சித்தம் கலங்கிட வைததவளே...
புத்தனாய் நான் இருந்தேன்...
நித்தம் நித்தம் நீயாய் வந்து
புத்தம் புது புன்னகையை
சத்தமாய் பரிசளித்தாய்... இன்று
பித்தனாய் நான் ஆனேன்...